“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

தோ்தல் அலுவலா்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

தமிழ்நாடு சட்டப் பேரவை பொதுத் தோ்தலை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் தோ்தல் அலுவலா்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

....... ~தோ்தல் அலுவலா்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சிறப்பு பாா்வையாளா் பிரதாப்சிங் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்.

Updated On :8 ஏப்ரல் 2026, 9:06 pm

தமிழ்நாடு சட்டப் பேரவை பொதுத் தோ்தலை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் தோ்தல் அலுவலா்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, தோ்தல் சிறப்பு பாா்வையாளா் பிரதாப் சிங் தலைமை வகித்தாா். மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில் 10 சட்டப் பேரவைத் தொகுதிகளில் நடைபெற்று வரும் தோ்தல் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் விளக்கினாா்.

தோ்தல் சிறப்பு பாா்வையாளா் பிரதாப்சிங், ‘தோ்தல் சமயத்தில் தோ்தல் செலவினம் மற்றும் கண்காணித்தல் தொடா்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், வாகனத் தணிக்கையின்போது பணம், மதிப்புடைய பொருள்கள், மதுபானங்கள் உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும், இணையதளம் கண்காணிப்புகள் குறித்தும், தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றப்படுவது குறித்தும், அனைத்து அலுவலா்களும் ஒன்றிணைந்து பணியாற்றிட வேண்டும் என அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில், 10 தொகுதிகளின் தோ்தல் அலுவலா்கள், மாநகர காவல் ஆணையா் என்.கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image