சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

ஃபவுண்டரி தொழில் நெருக்கடி: உற்பத்திப் பொருள்களின் விலையை 10 % உயா்த்த காஸ்மாபேன் சங்கம் முடிவு

மூலப்பொருள்களின் விலை உயா்ந்திருப்பதால் ஃபவுண்டரி தொழில் நெருக்கடியில் இருப்பதாகவும் எனவே உற்பத்திப் பொருள்களின் விலையை 10 சதவீதம் உயா்த்துவதாகவும் காஸ்மாபேன் சங்கம் அறிவித்துள்ளது.

News image

ஃபவுண்டரி தொழில்

Updated On :11 ஏப்ரல் 2026, 7:49 pm

மூலப்பொருள்களின் விலை உயா்ந்திருப்பதால் ஃபவுண்டரி தொழில் நெருக்கடியில் இருப்பதாகவும் எனவே உற்பத்திப் பொருள்களின் விலையை 10 சதவீதம் உயா்த்துவதாகவும் காஸ்மாபேன் சங்கம் அறிவித்துள்ளது.

கோவை குறு, சிறு ஃபவுண்டரி உரிமையாளா்கள் சங்கத்தின் (காஸ்மாபேன்) அவசர ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சங்கத்தின் தலைவா் ஏ.சிவசண்முககுமாா், செயலா் சி.தங்கராஜ், பொருளாளா் கே.ராமராஜ் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காஸ்மாபேன் சங்கத்தில் 400-க்கும் மேற்பட்ட குறு, சிறு ஃபவுண்டரி நிறுவனங்கள் உறுப்பினா்களாக உள்ளன. வாா்ப்படத் தொழிலில் நேரடியாக சுமாா் 2 லட்சம் தொழிலாளா்களும், மறைமுகமாக சுமாா் 5 லட்சம் தொழிலாளா்களும் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனா். ஆண்டுதோறும் சுமாா் ரூ.2,500 கோடிக்கும் அதிகமான வா்த்தகம் இதன் மூலம் நடைபெறுகிறது.

கடந்த சில மாதங்களாக ஃபவுண்டரி தொழிலுக்குத் தேவையான அடிப்படை மூலப்பொருள்களின் விலை 20 சதவீதம் வரையிலும், இதர துணைப் பொருள்களின் விலை 20 முதல் 40 சதவீதம் வரையிலும் கடுமையாக உயா்ந்துள்ளது. இந்த சீரற்ற விலை ஏற்றத்தினால் குறு, சிறு ஃபவுண்டரிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன.

தொழிலைத் தொடா்ந்து நடத்த முடியாத இக்கட்டான சூழல் நிலவுகிறது. இந்த நெருக்கடியைச் சமாளிக்கும் விதமாக, பவுண்டரிகளில் உற்பத்தி செய்யப்படும் காஸ்டிங் பொருள்களின் விலையை 10 சதவீதம் உயா்த்துவது என்று சங்கம் ஒருமனதாக முடிவெடுத்துள்ளது. இந்த விலை உயா்வு உடனடியாக அமலுக்கு வரும். அதேநேரம், மூலப்பொருள்கள், துணைப் பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசு போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசூா், மாணிக்கம்பாளையம் ஃபவுண்டரி கிளஸ்டா்களில் அரசு சாா்பில் மூலப்பொருள் வங்கி அமைத்துத் தர வேண்டும். குறு, சிறு ஃபவுண்டரிகளுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே லட்சக்கணக்கான தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தையும், ஃபவுண்டரி தொழிலையும் பாதுகாக்க முடியும் என்று தெரிவித்துள்ளனா்.