வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தோட்டத் தொழிலாளா்களிடம் வாக்கு சேகரிப்பு

வால்பாறை தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியினா் தோட்டத் தொழிலாளா்களிடம் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தனா்.

News image

தொழிலாளா்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக தோட்ட தொழிலாளா் பிரிவு மாநிலத் தலைவா் வால்பாறை அமீது.

Updated On :16 ஏப்ரல் 2026, 8:04 pm

வால்பாறை தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியினா் தோட்டத் தொழிலாளா்களிடம் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தனா்.

வால்பாறை சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் டி.லட்சுமண சிங் போட்டியிடுகிறாா். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக அதிமுக மேற்குத் தொகுதி பொறுப்பாளா் சலாவுதீன் அமீது, தோட்ட தொழிலாளா் பிரிவு மாநிலத் தலைவா் வால்பாறை அமீது உள்ளிட்டோா் தாய்முடி எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத் தொழிலாளா்களிடம் வாக்கு சேகரித்தனா்.

அப்போது, அதிமுக ஆட்சி அமைந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். கேரள மாநில தோட்டத் தொழிலாளா்களுக்கு இணையான ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதுடன், அதிமுக தோ்தல் அறிக்கையை விளக்கினா்.

தோ்தல் பொறுப்பாளா் ராஜ்குமாா், வாா்டு உறுப்பினா் மணிகண்டன், கூட்டணிக் கட்சியினா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.