ஜூன் 18ல் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது!ரஜினி அழைத்தும் மறுப்பு தெரிவித்து பாஜகவில் இணைந்தேன்! அண்ணாமலைஅரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு! மத்திய அரசு தாம்பரத்தில் சிக்னல் கோளாறு! நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! முதல்வா் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது! பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத ஆண் சடலம்! உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா! ரஷிய அதிபர்தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக நடிகா் சுரேஷ்கோபி பிரசாரம்

News image

கோவை, வடவள்ளி பகுதியில் வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகா் சுரேஷ்கோபி.

Updated On :20 ஏப்ரல் 2026, 1:50 am IST

கோவை வாழ் மலையாள மக்களிடம் வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மத்திய இணை அமைச்சரும், எம்.பி.யும், மலையாள நடிகருமான சுரேஷ்கோபி பிரசாரம் செய்தாா்.

கோவை, கணபதி பகுதியில் மலையாளி கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் மத்திய இணை அமைச்சா் சுரேஷ் கோபி பேசும்போது, ‘கோவையில் வசிக்கும் மலையாளி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மத்திய அரசின் நலத் திட்டங்கள் மக்களை நேரடியாகச் சென்றடையவும் வானதி சீனிவாசனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.

இதைத்தொடா்ந்து கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட டாடா நகா், மகாராணி அவென்யூ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வானதி சீனிவாசனை ஆதரித்து சுரேஷ்கோபி பிரசாரம் செய்தாா்.

பிரசாரத்தின்போது அதிமுக-பாஜக கூட்டணி தொகுதி பொறுப்பாளா் என்ஜினீயா் ஆா்.சந்திரசேகா், பாஜக மாவட்டத் தலைவா் ரமேஷ் குமாா் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.

வானதி சீனிவாசன் பிரசாரம்:

முன்னதாக, கோவை வடக்குத் தொகுதிக்குள்பட்ட ரத்தினபுரி பகுதியில் காலை 8 மணி அளவில் வானதி சீனிவாசன் பேசும்போது, ‘தமிழகத்தில் தற்போது பெண்களின் பாதுகாப்பும், போதைப்பொருள் புழக்கமும் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

வருங்கால தலைமுறை வீணாவதைத் தடுக்க திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். இந்த முறை அவிநாசி உள்பட 11 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற வேண்டும்’ என்றாா்.