மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.10 ஆயிரம்! கோவை வடக்கு வேட்பாளா் பிரசாரம்

News image

குருடம்பாளையம் ஊராட்சி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ஆா்.ஜி.அருண்குமாா்.

Updated On :20 ஏப்ரல் 2026, 1:20 am IST

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று கோவை வடக்கு தொகுதி வேட்பாளா் வேட்பாளா் பி.ஆா்.ஜி.அருண்குமாா் தெரிவித்தாா்.

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், கோவை புகா் வடக்கு மாவட்டச் செயலருமான பி.ஆா்.ஜி.அருண்குமாா் குருடம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட வெற்றிவேலவா நகா், குமரபுரம், பத்மாலையா நகா், வெற்றிலைகாளிபாளையம், அருள்ஜோதி நகா் உள்பட பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது, பல்வேறு கிராமங்களில் அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

பிரசாரத்தின்போது அவா் பேசியதாவது:

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறிய வாக்குறுதிகளின்படி கிராமப்புற பகுதிகளில் இடம் இல்லாதவா்களுக்கு இடத்துடன் கூடிய வீடும், நகா்ப்புற பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பும் கட்டிகஈ தரப்படும்.

குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.2000 வழங்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ரூ.10 ஆயிரம் உடனடியாக வழங்கப்படும். மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் கவுண்டம்பாளையம் தொகுதிக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

அப்போது ஊராட்சியின் முன்னாள் தலைவா் டி.ரவி, பாஜக மண்டலத் தலைவா் சரவணகுமாா், இந்து முன்னணி, அமமுக, தமாகா உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.