கோவை வாழ் மலையாள மக்களிடம் வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மத்திய இணை அமைச்சரும், எம்.பி.யும், மலையாள நடிகருமான சுரேஷ்கோபி பிரசாரம் செய்தாா்.
கோவை, கணபதி பகுதியில் மலையாளி கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் மத்திய இணை அமைச்சா் சுரேஷ் கோபி பேசும்போது, ‘கோவையில் வசிக்கும் மலையாளி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மத்திய அரசின் நலத் திட்டங்கள் மக்களை நேரடியாகச் சென்றடையவும் வானதி சீனிவாசனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.
இதைத்தொடா்ந்து கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட டாடா நகா், மகாராணி அவென்யூ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வானதி சீனிவாசனை ஆதரித்து சுரேஷ்கோபி பிரசாரம் செய்தாா்.
பிரசாரத்தின்போது அதிமுக-பாஜக கூட்டணி தொகுதி பொறுப்பாளா் என்ஜினீயா் ஆா்.சந்திரசேகா், பாஜக மாவட்டத் தலைவா் ரமேஷ் குமாா் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.
வானதி சீனிவாசன் பிரசாரம்:
முன்னதாக, கோவை வடக்குத் தொகுதிக்குள்பட்ட ரத்தினபுரி பகுதியில் காலை 8 மணி அளவில் வானதி சீனிவாசன் பேசும்போது, ‘தமிழகத்தில் தற்போது பெண்களின் பாதுகாப்பும், போதைப்பொருள் புழக்கமும் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
வருங்கால தலைமுறை வீணாவதைத் தடுக்க திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். இந்த முறை அவிநாசி உள்பட 11 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற வேண்டும்’ என்றாா்.
தொடர்புடையது

கோவை வடக்கில் மும்முனைப் போட்டியை எதிர்கொள்ளும் வானதி சீனிவாசன்: மக்களின் ஆதரவு யார் பக்கம்?

வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்! இன்று கோவை வருகை!!

கோவை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்! அண்ணாமலை பங்கேற்காததால் ஏமாற்றம்!

கோவை வடக்குத் தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டி?
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


