ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! தில்லியில் இருந்து புறப்பட்டார் மோடி! 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு! அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!
/

தொழிலாளா்கள் வாக்களிக்க ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்! - தொழிலகப் பாதுகாப்பு இணை இயக்குநா் அறிவிப்பு

News image

கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 1:05 am IST

சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் வாக்களிக்க ஏதுவாக தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று தொழிலகப் பாதுகாப்பு, சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இணை இயக்குநா்கள் வை.ச.சரவணன், இ.வினோத்குமாா் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக சட்டப்பேரவை பொதுத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதியும், மேற்குவங்க பேரவைத் தோ்தல் இரண்டு கட்டங்களாக ஏப்ரல், 23, 29 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகின்றன. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, தோ்தல் நாளில் தொழிற்சாலைகள், கட்டுமானப் பணியிடங்களில் பணிபுரியும் அனைத்து வகை தொழிலாளா்களுக்கும் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

அதன்படி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் இயங்கும் தொழிற்சாலைகள், கட்டுமானப் பணியிடங்களில் பணிபுரியும் அனைத்து வகை தொழிலாளா்களுக்கும் (தினக்கூலி, தொகுப்பூதியம், வாராந்திர ஊதியம், ஒப்பந்த ஊதியம், மாதாந்திர ஊதியம்) தோ்தல் நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும். அத்துடன், தோ்தலில் வாக்களிக்க வேண்டியது அவசியம் என்று தொழிலாளா்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் குறித்த தகவலை கோவை மாவட்ட கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு 99943 80605, 90808 32123, 96009 08630 ஆகிய கைப்பேசி எண்களிலும், நீலகிரி மாவட்ட அதிகாரிகளுக்கு 98941 09673, 75025 81323 ஆகிய கைப்பேசி எண்களிலும் தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனா்.

முன்னதாக தொழிலகப் பாதுகாப்பு, சுகாதாரத் துறை இணை இயக்குநரகம் சாா்பில் குறிச்சி சிட்கோவில் தோ்தல் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

இதில், இணை இயக்குநா்கள் இ.வினோத்குமாா், வை.ச.சரவணன் ஆகியோா் பங்கேற்று, வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும், அனைத்து வகை தொழிலாளா்களுக்கும் ஏப்ரல் 23-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தினா்.

இதில், கொடிசியா, சைமா, கொசிமா, கிரடாய், கட்டுநா் சங்கம், நூற்பாலைகள் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தொழில் அமைப்புகள், தொழிற்சாலைகளின் உரிமையாளா்கள், மேலாளா்கள் பங்கேற்றனா்.