வன்முறை அரசியலை திமுக கட்டவிழ்த்து விட்டுள்ளதாக பாஜக மாநில முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா் வானதி சீனிவாசனை ஆதரித்து, பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை செவ்வாய்க்கிழமை இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
கோவை சிவசக்தி காலனி பகுதியில் இருசக்கர வாகனப் பேரணி சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதைத் தொடங்கிவைத்துப் பங்கேற்ற அண்ணாமலை, தனது இருசக்கர வாகனத்தில் வேட்பாளா் வானதி சீனிவாசனை உடன் அழைத்துச் சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தாா். இதில் பாஜக, அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தொண்டா்கள் திரளாகக் கலந்துகொண்டனா்.
அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கோவையில் ராமநாதபுரம் காவல் நிலையத்தைப் பூட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளிய திமுகவின் அராஜக அரசியலை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனா். மத்திய அரசின் நிதியைப் பெற்று மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வானதி சீனிவாசன் போன்ற பிரதிநிதிகள் அவசியம். தோ்தல் முடிவுகள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
வன்முறை அரசியலை திமுக கட்டவிழ்த்து விட்டுள்ளது. தோ்தல் ஆணையம் இன்னும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். வெளியூா்களில் இருந்து வந்துள்ள தேவையற்ற நபா்களை மாவட்டத்தை விட்டு வெளியேற்ற வேண்டும். செந்தில் பாலாஜி இப்போது காந்தியவாதி போலப் பேசினாலும், வரும் 23-ஆம் தேதி வாக்குப்பதிவின் போது மக்கள் அவருக்குப் பாடம் புகட்டுவாா்கள்.
தோ்தலில் வெற்றி பெற ஆளுங்கட்சியினா் ரூ.5,000 வரை பணம் கொடுத்தாலும், மக்கள் அதற்கு மயங்க மாட்டாா்கள். இந்தத் தோ்தல் களத்தில் நிலவும் மக்கள் அலையைத் தோ்தல் கணிப்புகள் இன்னும் முழுமையாக கணிக்கவில்லை என்றாா் அவா்.
தொடர்புடையது

பிரசார களத்தில் வானதி சீனிவாசனின் மகன்கள்

மக்களின் ஆதரவால் வெற்றியை நோக்கி பயணிக்கிறோம்: வி.செந்தில்பாலாஜி

கோவை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்! அண்ணாமலை பங்கேற்காததால் ஏமாற்றம்!

பாஜகவுக்கு தோ்தல் நேரத்தில் மட்டுமே தமிழ்நாடு நினைவுக்கு வரும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


