தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

பொக்லைன் இயந்திரம் மோதி ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

கோவையில் இருசக்கர வாகனம் மீது பொக்லைன் இயந்திரம் மோதியதில் ஒரு வயது குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது.

News image

பலி

Updated On :22 ஏப்ரல் 2026, 9:26 pm

கோவையில் இருசக்கர வாகனம் மீது பொக்லைன் இயந்திரம் மோதியதில் ஒரு வயது குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது.

கோவை கணபதி ராஜீவ் காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் அனாகா (27). இவரது ஒரு வயது மகள் சுதேஷனா. இவருக்கு கடந்த சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இதற்காக அனாகா தனது நண்பரான சுதாகா் என்பவருடன் புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் தொப்பம்பட்டிக்குச் சென்றாா். அங்குள்ள மருத்துவமனையில் மகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னா், அவா்கள் மூவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். கணபதி பகுதியில் முன்னால் சென்ற பொக்லைன் இயந்திரத்தை சுதாகா் முந்த முயன்றாா். அப்போது, பொக்லைன் வாகனம், இவா்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் சிறுமி சுதேஷனா அதன் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா். சுதாகருக்கும், அனாகாவுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து கோவை வடக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.