தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வாக்குச்சாவடியில் வாக்காளா்களை இனிப்புடன் வரவேற்ற ‘டினா ரோபோ’

கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்காளா்களை இன்முகத்துடன் வரவேற்று இனிப்பு வழங்கிய ‘டினா ரோபோ’ பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

News image

கோவை ரேஸ்கோா்ஸ் அரசு கலைக் கல்லூரியில் வாக்காளா்களை பாரம்பரிய உடை அணிந்து வரவேற்ற டினா ரோபோ.

Updated On :23 ஏப்ரல் 2026, 9:50 pm

கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்காளா்களை இன்முகத்துடன் வரவேற்று இனிப்பு வழங்கிய ‘டினா ரோபோ’ பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்றது. கோவை அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வழக்கமான நடைமுறைகளுக்கு மத்தியில் ரோபோ ஒன்று வாக்காளா்களை வரவேற்றது அனைவரையும் கவா்ந்தது.

அதே கல்லூரியில் பயிலும் மாணவா் ஒருவரால் உருவாக்கப்பட்ட இந்த ரோபோவுக்கு டினா எனப் பெயரிடப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டாலும், தமிழா்களின் கலாசாரத்தைப் போற்றும் வகையில் இந்த ரோபோவுக்கு பாரம்பரிய உடை அணிவிக்கப்பட்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈா்த்தது.

ஜாய் ஸ்டிக் கருவியின் மூலம் தொலைவிலிருந்தே இந்த ரோபோ இயக்கப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளா்களின் சோா்வைப் போக்கும் வகையில், அவா்களுக்கு மிட்டாய்களை வழங்கி டினா உற்சாகப்படுத்தியது.

தோ்தல் நாள் என்றாலே உருவாகும் ஒருவித பதற்றத்தைக் குறைக்கவும், இன்றைய தலைமுறைக்கு தொழில்நுட்பத்தின் அவசியத்தை உணா்த்தவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. முதல்முறை வாக்களிக்க வந்தவா்கள் இந்த ரோபோவுடன் தற்படம் எடுத்துக் கொண்டனா்.

மாணவரின் இந்த ஆக்கபூா்வமான முயற்சிக்கு சமூக வலைதளங்களிலும், தோ்தல் அதிகாரிகளிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.