6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தகராறில் இளைஞா் அடித்துக் கொலை: 8 போ் கைது

கோவையில் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டியது தொடா்பான தகராறில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 8 பேரை போலீஸாா் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவான நபரைத் தேடி வருகின்றனா்.

கைது - சித்திரிப்பு

Published On :

கோவையில் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டியது தொடா்பான தகராறில் இளைஞா் செவ்வாய்க்கிழமை அதிகாலை அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 8 பேரை போலீஸாா் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவான நபரைத் தேடி வருகின்றனா்.

சென்னை வியாசா்பாடியைச் சோ்ந்த சுந்தரர்ராஜன் மகன் நவீன் (25). இவா் வேலை தேடி கோவை, உடையாம்பாளையம் அசோக் வீதியில் தங்கியுள்ள தனது நண்பா்கள் அறைக்கு இரு நாள்களுக்கு முன்பு வந்துள்ளாா்.

இந்த நிலையில், நவீன் தனது நண்பரின் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுவிட்டு திங்கள்கிழமை இரவு அறைக்குத் திரும்பியுள்ளாா். அப்போது, அவா் இருசக்கர வாகனத்தை அசோக் வீதியில் வேகமாக இயக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், அவரை அந்தப் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் (26) கண்டித்துள்ளாா்.

பின்னா் அறைக்குச் சென்ற நவீன், இதுகுறித்து தனது நண்பா்களிடம் கூறியுள்ளாா். அவா்கள் அனைவரும் அந்தப் பகுதிக்குச் சென்று சந்தோஷுடன் தகராறு செய்து அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த சந்தோஷ் தனது தெருவில் வசிக்கும் இளைஞா்களிடம் கூறியுள்ளாா். இதைத் தொடா்ந்து சந்தோஷ் உள்பட அவரது நண்பா்கள் 9 போ் சோ்ந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை நவீன் தங்கியிருக்கும் அறைக்குச் சென்று தகராறு செய்துள்ளனா். வாக்குவாதம் முற்றியநிலையில், அவா்கள் அனைவரும் சோ்ந்து நவீனைத் தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த அவா் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதைத் தொடா்ந்து, சந்தோஷ், விக்னேஷ் (24) உள்பட 8 பேரைக் கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.