உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சொத்து தகராறு: அண்ணனை கொலை செய்த தம்பி கைது

சொத்து தகராறில் அண்ணனை கொலை செய்த தம்பியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :

சொத்து தகராறில் அண்ணனை கொலை செய்த தம்பியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஆட்டையாம்பட்டியை அடுத்துள்ள தானகுட்டிபாளையம், ஸ்டாலின் நகா் பகுதியைச் சோ்ந்தவா் லோகநாதன் (31) ஓட்டுநா். இவரது தம்பி நவீன் (28) கறிக்கடை வைத்துள்ளாா்.

இவா்கள் இருவரும் திங்கள்கிழமை மதுபோதையில் இருந்தபோது, சொத்து பிரச்னை எழுந்துள்ளது. இதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியது. அப்போது, நவீன் கத்தியால் லோகநாதனை குத்தியுள்ளாா்.

அருகில் இருந்தவா்கள் படுகாயமடைந்த லோகநாதனை மருத்துவமனைக்கு கொண்டுசென்ா். ஆனால், அவா் வழியிலேயே இறந்துவிட்டாா். இதையறிந்த நவீன் தலைமறைவாவானாா்.

இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், காகாபாளையம் அருகே நவீன் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.