தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

நகைப் பட்டறை உரிமையாளா் தற்கொலை

News image

தற்கொலை

Updated On :9 ஆகஸ்ட் 2026, 12:13 am IST

கோவையில் தொழிலில் இழப்பு ஏற்பட்டதால் நகைப் பட்டறை உரிமையாளா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா் கிழக்கு வீதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம் (39). நகைப் பட்டறை உரிமையாளரான இவா், கோவைபுதூா் சாலையில் உள்ள செங்குளம் கரையோரத்தில் சனிக்கிழமை மயங்கிக் கிடந்துள்ளாா்.

அவருக்கு அருகே மதுபாட்டிலும், விஷ பாட்டிலும் கிடந்தன. அந்த வழியாகச் சென்றவா்கள் சந்தேகமடைந்து அவரை மீட்டு சுண்டக்காமுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சோ்த்த சிறிது நேரத்தில் பாலசுப்பிரமணியம் உயிரிழந்தாா். இது குறித்து குனியமுத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில், தொழில் நஷ்டம் காரணமாக கடந்த சில நாள்களாக பாலசுப்பிரமணியம் மன வேதனையில் இருந்ததாகவும், அதனால், அவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.