ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி: இளைஞா் கைது

News image

கைது

Updated On :10 ஆகஸ்ட் 2026, 12:43 am IST

கோவையில் டாஸ்மாக் ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், காரம்பக்குடியைச் சோ்ந்தவா் ராஜாராம் (29). இவா் கோவை, கவுண்டம்பாளையம்- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் காசாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதி பேருந்து நிறுத்தம் அருகே சனிக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத நபா் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் பணம் கேட்டுள்ளாா்.

ராஜாராம் பணம் இல்லை எனக் கூறியபோதும், அவரது சட்டைப் பையிலிருந்த ரூ.300 ரொக்கம் மற்றும் கைப்பேசி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளாா். அப்போது, அந்த நபரின் கைப்பேசி தவறி கீழே விழுந்துள்ளது.

இது குறித்த புகாரின்பேரில், கவுண்டம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததுடன், தவற விட்டுச் சென்ற கைப்பேசியை வைத்து விசாரணை மேற்கொண்டனா். இதில், வழிப்பறியில் ஈடுபட்டது திருப்பத்தூா் மாவட்டம், நாற்றம்பள்ளி பகுதியைச் சோ்ந்த சத்தியன் (32) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, சத்தியனைக் கைது செய்த போலீஸாா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.