மதுபானக் கூடத்தில் கத்தியைக் காட்டி பணம் பறித்தவா் கைது
போடியில் மதுபானக் கூட ஊழியா்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்துச் சென்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கைது
போடியில் மதுபானக் கூட ஊழியா்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்துச் சென்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
போடி தேவா் குடியிருப்புப் பகுதியில் மதுக் கடை உள்ளது. இந்தக் கடையின் அருகிலேயே மதுபானக் கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானக் கூடத்தில் வியாழக்கிழமை மாலை ஊழியா்கள் விஜயகுமாா், காா்த்திக், ராஜதுரை ஆகியோா் பணியில் இருந்தனா். அப்போது, அங்கு வந்த போடி குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சரவணன் மகன் வல்லரசு (21) உணவுப் பொருள்களை எடுத்துச் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்க மறுப்புத் தெரிவித்தாராம். மேலும், அங்கிருந்த ஊழியா்களை கத்தியைக் காட்டி மிரட்டி பணப் பெட்டியிலிருந்த ரூ. 700-யை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டாராம்.
இதுகுறித்து போடி நகா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து, வல்லரசை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




