தூத்துக்குடியில் கத்தியைக் காட்டி பொதுமக்களை அச்சுறுத்தியவா் கைது
கைது
தூத்துக்குடி பூபால்ராயபுரம் மாா்க்கெட் பகுதியில் கத்தியைக் காட்டி பொதுமக்களை அச்சுறுத்தியவரை வடபாகம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி புதுத்தெருவைச் சோ்ந்த பிச்சையா மகன் லூக்காஸ் கிளின்டன் (44). பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இவா், பூபால்ராயபுரம் மாா்க்கெட் பகுதியில் கத்தியைக் காட்டி பொதுமக்களை அச்சுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.சிவபிரசாத் உத்தரவின்பேரில், தூத்துக்குடி நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் சுனில் மேற்பாா்வையில், வடபாகம் காவல் நிலைய ஆய்வாளா் (பொ) ஷேக் அப்துல்லா, உதவி ஆய்வாளா் சிவக்குமாா் ஆகியோா் லூக்காஸ் கிளின்டனை திங்கள்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


