வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை! மருத்துவமனை அறிக்கை!தவெகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம்; விசில் சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்

கத்தியை காட்டி பொதுமக்களுக்கு மிரட்டல்: 3 இளைஞா்கள் கைது

வந்தவாசியில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டியதாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

சித்திரிப்பு

Published On :

வந்தவாசியில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டியதாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி யாதவா் தெருவில் 3 இளைஞா்கள் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டுவதாக வந்தவாசி தெற்கு போலீஸாருக்கு சனிக்கிழமை காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று அவா்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா்கள் 3 பேரும் வந்தவாசி பெட்டிநாயுடு தெருவைச் சோ்ந்த கதிா் (21), இந்திரா நகரைச் சோ்ந்த பூபால் (19), அத்திப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த பூவரசன் (19) என்பது தெரியவந்தது. இவா்கள் 3 பேரையும் கைது செய்த போலீஸாா், கத்தியை பறிமுதல் செய்தனா். மேலும், இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.