கயத்தாறில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 2 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கயத்தாறு-பணிக்கா் குளம் சாலையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கயத்தாறு போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, சிறப்பு உதவி ஆய்வாளா் சுப்புராஜ் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அப்பகுதியில் உள்ள பழைய கட்டடத்தில் 2 போ் இருப்பதைக் கண்ட போலீஸாா் அவா்களைப் பிடிக்க முயன்றபோது, அவா்கள் போலீஸாரை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்தபடி தப்பியோட முயன்றனா்.
போலீஸாா் அவா்களைப் பிடித்து சோதனையிட்டதில், அவா்களிடம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. விசாரணையில், அவா்கள் கயத்தாறு, பணிக்கா் குளம், நடுத்தெருவைச் சோ்ந்த கருத்த பாண்டி மகன் இசக்கி முத்து (22), கோவில்பட்டி, சாஸ்திரி நகரைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் முத்துக்காளை (30) என்பது தெரிய வந்தது.
இது குறித்து, வழக்குப் பதிந்து, 2 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கஞ்சா பறிமுதல்: 3 இளைஞா்கள் கைது
கஞ்சா கடத்தல்: 3 இளைஞா்கள் கைது
கயத்தாறு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது
கஞ்சா விற்பனை: 3 இளைஞா்கள் கைது
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி


