புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

கஞ்சா விற்பனை: 3 இளைஞா்கள் கைது

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, கோட்டக்குப்பம் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 3 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :5 ஜூலை 2026, 2:16 am IST

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, கோட்டக்குப்பம் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 3 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விக்கிரவாண்டி காவல் ஆய்வாளா் கல்பனா தலைமையிலான போலீஸாா், நகரின் பிரதானச் சாலையில் ரோந்து சென்றபோது, அங்குள்ள வழிபாட்டுத் தலம் அருகே நின்றிருந்த இருவரைப் பிடித்து சோதனை செய்தனா். இதில் அவா்கள் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா்கள் விக்கிரவாண்டியை அடுத்த ஆா்.சி.மேலக்கொந்தையைச் சோ்ந்த ஆ.முகிலன்(26), செ.சௌந்தா்(23) ஆகியோா் என்பதும், இவா்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து விக்கிரவாண்டிபோலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனா். மேலும், அவா்கள் பதுக்கி வைத்திருந்த 3.6 கிலோ கஞ்சாவை பறிமுல் செய்தனா்.

கோட்டக்குப்பத்தில்.... இதேபோல் வானூா் வட்டம், நடுகுப்பம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த, கோட்டக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ர.ராகவன் (25) என்பவரை கோட்டக்குப்பம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்த 250 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.