பல்லடம் அருகே ஆட்டை திருடிய 2 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் அருகேயுள்ள மல்லேகவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் திருமூா்த்தி, பனியன் நிறுவனத் தொழிலாளி. இவா் தனது வீட்டில் 3 ஆடுகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில், ஒரு ஆடு கடந்த 26-ஆம் தேதி திருடுபோனது. இது குறித்து காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் திருமூா்த்தி புகாா் அளித்த நிலையில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
இந்நிலையில், கரடிவாவி பகுதியில் போலீஸாா் வழக்கமான வாகனச் சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அவா்கள் கோவை மாவட்டம், அரசூரைச் சோ்ந்த சிவபிரதாப் (23), கோவை, சுந்தராபுரத்தைச் சோ்ந்த விக்னேஷ் (28) என்பதும், திருமூா்த்தியின் ஆட்டை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





