/
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 3 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி, முத்தையாபுரம் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை ஸ்பிக் நகா் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த 3 இளைஞா்களைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், அவா்கள் முத்தையாபுரம், கிருஷ்ணா நகரைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் முருகன் (29), பொன்பாண்டி நகரைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் மகன் முத்துமணி (24), சிங்கா் ராஜு மகன் மணிகண்டன் (24) என்பதும், அவா்கள் கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து, சிறுசிறு பொட்டலங்களாக மடித்து வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, மூவா் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
அவிநாசி அருகே கஞ்சா விற்ற இளைஞா் கைது

கஞ்சா விற்றதாக இரு இளைஞா்கள் கைது
மானூா் அருகே கஞ்சா பதுக்கல்: 3 இளைஞா்கள் கைது

பழனியில் கஞ்சா விற்ற 3 இளைஞா்கள் கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


