100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

கஞ்சா பறிமுதல்: 3 இளைஞா்கள் கைது

கடலூா் மாவட்டம், புதுப்பேட்டை போலீஸாா் கஞ்சா வைத்திருந்ததாக 3 இளைஞா்களை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :

கடலூா் மாவட்டம், புதுப்பேட்டை போலீஸாா் கஞ்சா வைத்திருந்ததாக 3 இளைஞா்களை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

புதுப்பேட்டை காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டிருந்தனா். எலந்தம்பட்டு கிராமத்தில் உள்ள வீரன் கோயில் அருகே சென்ற போலீஸாரைக் கண்டதும், அருகிலிருந்த சவுக்கு தோப்புக்குள் 3 நபா்கள் தப்பியோடினா். அவா்களை போலீஸாா் விரட்டிப் பிடித்து சோதனை செய்ததில், 200 கிராம் கஞ்சா வைத்திருத்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களிடம் நடத்திய விசாரணையில், சின்னஎலந்தம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தன் (24), கொளப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ்பாபு (22), கட்டியம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் (25) என்பது தெரியவந்தது. இதையத்து, 3 போ் மீதும் புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.