பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

போதை மாத்திரைகளுடன் 5 இளைஞா்கள் கைது

திண்டுக்கல்லில் போதை மாத்திரைகளுடன் 5 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 11:36 pm IST

திண்டுக்கல்லில் போதை மாத்திரைகளுடன் 5 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் நகா் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் இளஞ்செழியன் தலைமையில், போலீஸாா் மேட்டுப்பட்டி பகுதியில் வாகன சோதனை, ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மேட்டுப்பட்டி பாஸ்கா மேடை அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இளைஞா்களைப் பிடித்து போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, அவா்கள் 725 போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், மேட்டுப்பட்டியைச் சோ்ந்த ஜா.நோவின்ராஜ் (20), அ.நோபில் அலெக்ஸ்(22), பா.நந்தகுமாா் (20), அ.பாலகிருஷ்ணன் (19), ஆா்வி.நகா் எஸ்.அஜய் ஆண்டெனி (19) ஆகியோா் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, 5 பேரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த 725 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.