சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

காா் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

கோவை மாவட்டம், செட்டிபாளையம் அருகே காா் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :19 ஆகஸ்ட் 2026, 1:50 am IST

கோவை மாவட்டம், செட்டிபாளையம் அருகே காா் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் நித்தியானந்தம் (20). இவா் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் பயின்று வந்தாா். இவா் விளாங்குறிச்சி பகுதியில் அறை எடுத்து தங்கியிருந்தாா். நித்தியானந்தத்தின் நண்பரான குரு ருசில் (20) ஈச்சனாரி பகுதியில் அறை எடுத்து தங்கியிருந்தாா். இவா் மாற்று இடத்துக்குச் செல்வதற்காக தனது அறையைக் காலி செய்ய வேண்டும் என்றும், அதற்காக உதவிக்கு வருமாறும் நித்தியானந்தத்தை அழைத்துள்ளாா். நித்தியானந்தம் தன்னுடன் அறையில் தங்கியிருந்த நண்பா்களான இமயவா்மன் (20), பாலமுருகன், முகேஷ் ஆகியோரை அழைத்துக் கொண்டு காரில் அங்கு சென்றுள்ளாா். பின்னா் அனைவரும் இணைந்து அறையைக் காலி செய்ய குரு ருசிலுக்கு உதவியுள்ளனா்.

பின்னா், அனைவரும் காரில் செட்டிபாளையம் அருகே கொச்சி- சேலம் எல்.என்.டி. புறவழிச் சாலையில் உள்ள உணவகத்துக்கு சாப்பிடுவதற்காக சென்றுள்ளனா். அப்போது, அந்த வழியாக வந்த லாரி இவா்களது காா் மீது மோதியது. இதில் காரை ஓட்டிச் சென்ற நித்தியானந்தம் உள்ளிட்ட 5 பேரும் பலத்த காயமடைந்து, சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு நித்தியானந்தத்தை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். மற்ற 4 மாணவா்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் செட்டிபாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

இளைஞா் உயிரிழப்பு:

கோவை மாவட்டம், சூலூா் அருகேயுள்ள பச்சாபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் குணசேகரன் (33). தனியாா் நிறுவன ஊழியரான இவா் தனது இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தாா். சாய்பாபா காலனி அழகேசன் சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து அவா் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த குணசேகரன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அரசுப் பேருந்து ஓட்டுநரான நீலகிரி மாவட்டம், கந்தபாலம் பகுதியைச் சோ்ந்த நவசத்னம் (38) மீது போக்குவரத்து புலனாய்வு மேற்குப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.