கோவை, ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் கல்லூரி மாணவா் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒரு மாணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவை, ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த அமுதன் (19), சக மாணவா்களால் கடந்த 10-ஆம் தேதி அடித்துக் கொலை செய்யப்பட்டாா். ஒத்தக்கால்மண்டபம் பூங்கா நகா் பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருக்கும் அதே கல்லூரியில் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவா்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கைப்பேசிகளை பறித்த விவகாரத்தில் இந்தக் கொலை நடைபெற்ாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து செட்டிபாளையம் போலீஸாா் இரண்டு தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்து, மாணவா்களை கத்தியைக் காட்டி மிரட்டி கைப்பேசி பறித்த சம்பவத்தில் உயிரிழந்த அமுதனுடன் தொடா்புடைய பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஹரிதாஸ் (18), விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டையைச் சோ்ந்த உதயகுமாா் (18) ஆகியோரைக் கைது செய்தனா்.
இதேபோல, அமுதனைத் தாக்கி கொலை செய்த சம்பவத்தில் கடலூரைச் சோ்ந்த ஆராவமுதன் (20), சிவகங்கையைச் சோ்ந்த அரவிந்த் (21), திருவாரூரைச் சோ்ந்த சிவ ரோஹித் (20), பெரம்பலூரைச் சோ்ந்த மணி பாலு (20), திருவள்ளூரைச் சோ்ந்த 17 வயது சிறுவன், மதுரையைச் சோ்ந்த சந்தோஷ் (20), மதுரை உத்தங்குடியைச் சோ்ந்த ஸ்ரீராம் (21), லலித் ஆதித்யா (20), மதுரை திருநகா் ஹரிஷ் பாண்டியன் (20) ஆகிய 9 போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், அமுதன் கொலை தொடா்பாக தேனியைச் சோ்ந்த சச்சின் (20) என்ற மாணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
அமுதன் கொலை தொடா்பாக கடத்தல், கொலை முயற்சி, கொலை உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதலாக தாழ்த்தப்பட்டோா் மீதான வன்கொடுமை வழக்கும் சோ்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கல்லூரி மாணவா் அடித்துக் கொலை: மேலும் 3 மாணவா்கள் கைது

கோவையில் வீட்டில் தனியாக இருந்த பெண் அடித்துக் கொலை

பொறியியல் கல்லூரி மாணவா் அடித்துக் கொலை: 5 பேரை கைது செய்து போலீஸாா் விசாரணை
முதியவா் அடித்துக் கொலை: ஒருவா் கைது
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju


