சிவகங்கையைச் சோ்ந்த முதியவரைத் தாக்கி கொலை செய்த வழக்கில் தொடா்புடைய நால்வரில் ஒருவரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும் மூவரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
சிவகங்கை போஸ் சாலை பகுதியைச் சோ்ந்தவா் பாபு (60). தச்சுத் தொழிலாளி. இவா், கடந்த சனிக்கிழமை (ஆக.1) சொந்த ஊரான பாகனேரிக்கு சென்றபோது, அங்குள்ள ஊராட்சி அலுவலகம் அருகே சிலா் மது குடித்துக் கொண்டிருந்தனா்.
அவா்களை பாபு தட்டிக் கேட்டதில் அவா்கள் பாபுவை கட்டையால் தாக்கினா். இதில், பலத்த காயமடைந்த பாபுவை மதுரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து மதகுபட்டி போலீஸாா், நெற்புகப்பட்டியைச் சோ்ந்த பன்னீா்செல்வம் (53), பாகனேரியைச் சோ்ந்த சின்னதிருஞானம் (32), ஷியாம் (27), இளந்திரை ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிந்து, பன்னீா்செல்வத்தை கைது செய்தனா். மற்ற மூன்று பேரையும் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தந்தையை அடித்துக் கொலை செய்த மகன் கைது
தென்காசி அருகே விவசாயி கொலை வழக்கில் மேலும் இருவா் கைது

மகன் அடித்துக் கொலை: தாய், சகோதரா் கைது

மனைவி அடித்துக் கொலை: 2-ஆவது கணவா் தலைமறைவு
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK


