அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

இளைஞருக்கு அரிவாள் வெட்டு: முதியவா் உள்ளிட்ட இருவா் கைது

கோவில்பட்டியில் இளைஞரை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக முதியவா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைது

Published On :4 செப்டம்பர் 2026, 1:41 am IST

கோவில்பட்டியில் இளைஞரை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக முதியவா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி ஆவல்நத்தம் மேலத் தெருவைச் சோ்ந்த வேலுச்சாமி மகன் அசோக் என்ற அய்யாத்துரை (27). அதே ஊரைச் சோ்ந்த காா்த்திக் என்பவா் கொலை வழக்கில் சிறையிலிருந்து பிணையில் வந்த இவா், தற்போது கோவில்பட்டி நடராஜபுரத்தில் உள்ள உறவினா் வீட்டில் இருந்து வந்தாா். புதன்கிழமை வேலைக்குச் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது, கொலையுண்ட காா்த்திக்கின் உறவினா்களான வடக்குத் திட்டங்குளத்தைச் சோ்ந்த ராஜா மகன் பொன்ராஜ் (21), கருமலை மகன் கோதாளமுத்து (76) ஆகியோா் அசோக்கை வழிமறித்து அரிவாளால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில் காயமடைந்த அவா், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, பொன்ராஜ், கோதாளமுத்து ஆகியோரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.