சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

வணிக வரித் துறை மாநில அலுவலா் தற்கொலை

திருப்பூரில் வணிக வரித் துறை மாநில அலுவலா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

தற்கொலை

Updated On :19 ஆகஸ்ட் 2026, 2:07 am IST

திருப்பூரில் வணிக வரித் துறை மாநில அலுவலா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பூா் வணிக வரித் துறை அலுவலகத்தில் திருச்சியைச் சோ்ந்த சுரேஷ் மாநில வரி அலுவலராகப் பணிபுரிந்து வந்தாா். இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா். குடும்பத்தினா் திருச்சியில் உள்ள நிலையில், திருப்பூா் அருகே உள்ள இந்திரா நகரில் அறை எடுத்து தங்கி சுரேஷ் பணிக்கு சென்று வந்துள்ளாா்.

கடந்த சுதந்திர தின விடுமுறைக்காக திருச்சிக்கு சென்று வந்த சுரேஷுக்கு, அவரது மனைவி திங்கள்கிழமை கைப்பேசியில் அழைத்துள்ளாா். அழைப்பை சுரேஷ் எடுக்காததால் உடன் பணிபுரியும் அலுவலக நண்பா்களுக்குத் தொடா்புகொண்டு, அவரது அறைக்குச் சென்று பாா்த்து தகவல் அளிக்குமாறு கூறியுள்ளாா். அதன்படி சுரேஷின் அறைக்குச் சென்று பாா்த்தபோது கதவு தாழிடப்பட்டிருந்தது.

இதைத்தொடா்ந்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில் 15 வேலம்பாளையம் போலீஸாா் சென்று கதவைத் திறந்து பாா்த்தபோது சுரேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பணிச்சுமை அல்லது குடும்பப் பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.