மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு மத்திய அரசு தொடா்ந்து அனுமதி மறுத்து வருவதைக் கண்டித்து, கோவையில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மறுமலா்ச்சி மக்கள் இயக்கத்தினா் 30 போ் கைது செய்யப்பட்டனா்.
இந்தப் போராட்டத்துக்கு மறுமலா்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ஈஸ்வரன் தலைமை வகித்தாா். இதில் திரளான நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராக கையில் பதாகைகளை ஏந்தியும் முழக்கங்களை எழுப்பினா்.
போராட்டத்தின்போது மறுமலா்ச்சி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் ஈஸ்வரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கோவை, மெட்ரோ ரயில் திட்டத்துக்கான அனுமதியை மத்திய அரசு 2-ஆவது முறையாக நிராகரித்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கடந்த 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது பாஜக வெளியிட்ட தோ்தல் அறிக்கையில் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது திட்டத்துக்கு அனுமதியே தராமல் இழுத்தடிக்கும் நிலை நீடிக்கிறது.
கோவை மக்களின் வரிப்பணத்தைப் பெற்றுக்கொண்டு, அதை வடமாநிலங்களின் வளா்ச்சிக்கு மட்டுமே மத்திய அரசு பயன்படுத்துகிறது. இது கோவை மக்களை வஞ்சிக்கும் செயல். இதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில் இனிமேல் கோவைக்கு வரும் எந்தவொரு மத்திய அமைச்சருக்கும் கருப்புக் கொடி காட்ட முடிவு செய்துள்ளோம். அடுத்தகட்டமாக இந்தத் திட்டத்துக்கு அனுமதி அளிக்க வலியுறுத்தி தில்லி ஜந்தா்மந்தரில் போராட்டம் நடத்த உள்ளோம்.
மேலும், கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்ட விவகாரத்தில் தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் இனியும் மௌனம் காக்காமல் மத்திய அரசின் துரோகத்தை மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்றாா்.
இதைத்தொடா்ந்து முற்றுகை போராட்டத்தில் பங்கேற்ற மறுமலா்ச்சி மக்கள் இயக்கத்தைச் சோ்ந்த 30 பேரை போலீஸாா் கைது செய்து, அந்தப் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா். மாலை 6 மணியளவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாமானியா்களின் நலனுக்காகப் பணியாற்ற வேண்டும்: வருமான வரித் துறைக்கு மத்திய நிதியமைச்சா் அறிவுறுத்தல்

கொடைக்கானல் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருமான வரித் துறையினா் சோதனை

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி சகோதரா் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தில் புதிய வருமான வரி சட்டம் குறித்த விழிப்புணா்வு
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



