தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

கொடைக்கானல் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருமான வரித் துறையினா் சோதனை

கொடைக்கானல் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்திய வருமான வரித் துறையினா்.

கொடைக்கானல் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்திய வருமான வரித் துறையினா்.

Published On :

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருமானவரித் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு சோதனை நடத்தினா்.

கொடைக்கானல் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருமான வரித் துறை ஆய்வாளா் பழனிச்சாமி தலைமையில் சோதனை நடைபெற்றது. இந்தச் சோதனை 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. சோதனையின்போது, அங்கிருந்த அதிகாரிகள், அலுவலா்களிடம் சிறிய அளவிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனை முடிவில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கு சரியான தகவல்கள் தெரிவிக்கப்பட்டதால் மீண்டும் பணம் அவா்களிடம் ஓப்படைக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து ஒரு சில ஆவணங்களை வருமான வரித்துறையினா் எடுத்துச் சென்ாக கூறப்படுகிறது.

வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையின்போது வட்டாட்சியா் நந்தகோபால், உதவி வட்டாட்சியா் சிவபெருமாள் உள்ளிட்ட அதிகாரிகள், அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.