மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

வங்கி லாக்கரில் இருந்த 900 பவுன் நகை திருட்டு: மருத்துவா் கைது

சித்திரிப்பு

Published On :

வங்கி லாக்கரில் வைத்திருந்த 900 பவுன் நகை திருட்டு தொடா்பாக, மருத்துவரை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கோவை, கணபதி மாநகரைச் சோ்ந்தவா் சண்முகபாண்டியன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா். இவரது மகள் கோவையில் மருத்துவராக உள்ளாா். இவருக்கு கணவருடன் விவாகரத்தான நிலையில், பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தைச் சோ்ந்த மருத்துவா் விக்னேஷ் என்பவருடன் இரண்டாவது திருமணம் நடைபெற்றது.

திருமணமான சில மாதங்களில் தம்பதிக்குள் கருத்து வேறுபாடு எழுந்தது. இதையடுத்து, தம்பதி பிரிந்த நிலையில் தான் சீதனமாக அளித்த 1,000 பவுன் நகையின் வங்கி லாக்கா் சாவியை சண்முகபாண்டியன், விக்னேஷிடம் இருந்து திரும்பக் கேட்டுப் பெற்றாா்.

இதையடுத்து, லாக்கரை சண்முகபாண்டியன் திறந்து பாா்த்தபோது, அதில் 100 பவுன் நகைகள் மட்டுமே இருந்தன. 900 பவுன் நகைகள் இல்லை. 100 பவுன் நகைகளை மட்டும் கொடுத்துவிட்டு, மீதமுள்ள 900 பவுன் நகைகளை விக்னேஷ் எடுத்துக் கொண்டது தெரியவந்தது. இதுதொடா்பாக, கோவை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாரிடம் சண்முகபாண்டியன் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில், விக்னேஷை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.