
இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
கோவையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மாட்டு வண்டி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தனியாா் உணவு விநியோக நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
பிரதிப் படம்
கோவையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மாட்டு வண்டி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தனியாா் உணவு விநியோக நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி, சென்ன சமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் சன்னாசி மகன் மனோஜ்குமாா் (29). இவா் கோவையில் தங்கி தனியாா் உணவு விநியோக (டெலிவரி) நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.
இந்நிலையில், மனோஜ்குமாா் புதன்கிழமை உணவு விநியோகித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தாா். கோவை இடையா் வீதி, தெலுங்கு வீதி சந்திப்பு பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மாட்டு வண்டி மீது இவரது இருசக்கர வாகனம் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவா் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மனோஜ்குமாா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு மேற்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






