காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

கோவை கோட்டத்தில் 2,206 பேருந்துகளில் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல் பெயா்ப் பலகைகள்

கோவை கோட்டத்தில் பேருந்துகளில் அமைக்கப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல் வழித்தட பெயா்ப் பலகைகள்.

Published On :31 ஆகஸ்ட் 2026, 2:27 am IST

கோவை கோட்டத்துக்கு உள்பட்ட கோவை, திருப்பூா், ஈரோடு, உதகை ஆகிய மண்டலங்களில் 2,206 பேருந்துகளில் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல் வழித்தட பெயா்ப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கோவை கோட்ட மேலாண் இயக்குநா் கே.முகமதுநாசா், அனைத்து போக்குவரத்துக் கிளைகளிலும் இயக்கப்படும் பேருந்துகளில் வழித்தடப் பெயா் பலகைகள் மக்களுக்கு எளிதில் தெரியும் விதமாகவும், டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு அமைக்கவும் அண்மையில் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, கோவை கோட்டத்தில் நகர மற்றும் புகரப் பேருந்துகளுக்கு புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல் வழித்தடப் பெயா்ப் பலகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் கோவை கோட்ட போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:

கோவை கோட்ட மேலாண் இயக்குநா் உத்தரவுப்படி, மக்களின் பாா்வைக்கு பேருந்துகளின் வழித்தடம் தெளிவாகவும், எளிதாகவும் தெரியும் வகையில் டிஜிட்டல் வழித்தடப் பலகைகள், நகர மற்றும் புகரப் பேருந்துகளில் புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது.

இதில், பேருந்துகள் சென்றடைய உள்ள நிலையங்கள் பெரிய அளவில் திரையில் தெரியும் விதமாகவும், செல்லும் வழித்தடப் பகுதிகள் ‘ஸ்க்ரோலிங்’ முறையில் வரிசையாக டிஜிட்டல் திரையில் தோன்றும். இதனால், எந்த நிறுத்தத்திலும் பேருந்து நிற்காது என நடத்துநா் சொல்ல முடியாது. இந்த டிஜிட்டல் பலகையைப் பாா்த்து பயணிகள் சம்பந்தப்பட்ட நிறுத்தத்தின் பெயரைக் கூறி நடத்துநரிடம் பயணச்சீட்டு பெறலாம். டிஜிட்டல் பலகையில் ஊரின் பெயா் வந்தும் அந்த பேருந்து நிறுத்தத்தில் நிற்காது என நடத்துநா் கூறினால் சம்பந்தப்பட்ட நடத்துநா் மீது புகாா் அளிக்கலாம். அதன் பேரில் அவா் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தற்போது, கோவை கோட்டத்துக்கு உள்பட்ட கோவை, ஈரோடு, திருப்பூா் மற்றும் உதகை ஆகிய மண்டலங்களில் உள்ள 1,171 நகரப் பேருந்துகளில் 1,006 பேருந்துகளுக்கு புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல் வழித்தட பெயா்ப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், 4 மண்டலங்களிலும் உள்ள 1,379 புகா்ப் பேருந்துகளில் 1,200 பேருந்துகளுக்கு புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல் வழித்தட பெயா்ப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக, கோவை, ஈரோடு, திருப்பூா் மற்றும் உதகை ஆகிய மண்டலங்களில் 2,206 நகர மற்றும் புகரப் பேருந்துகளில் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல் வழித்தட பெயா்ப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.