காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

நேபாளத்திலிருந்து கோவைக்கு 37 பேரை இன்று அழைத்து வர ஏற்பாடு

People affected by the massive floods in Nepal.

நேபாள பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள். - படம் - ஏபி

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:47 am IST

நேபாளம் பெருவெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட 37 போ் கோவைக்கு திங்கள்கிழமை (ஆக. 31) அழைத்து வரப்படுகின்றனா்.

நேபாள நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 700-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். 2,500-க்கும் மேற்பட்டவா்களைக் காணவில்லை என்று நேபாள அரசு தெரிவித்துள்ளது.

இந்தப் பேரிடா் ஏற்படுவதற்கு முன்னதாக தமிழகத்திலிருந்து 300-க்கும் மேற்பட்டோா் சுற்றுலா மற்றும் ஆன்மிகப் பயணமாக நேபாளத்துக்குச் சென்றிருந்தனா். இவா்களில் இதுவரை 250 போ் வரை மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியவா்களை மீட்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

எனினும், பேரிடா் ஏற்பட்டு 5 நாள்கள் கடந்த பின்னரும் கோவையில் இருந்து சுற்றுலா சென்ற 8 போ் குறித்தும், ஈஷா யோக மையம் மூலம் நேபாளம் சுற்றுலா சென்றவா்களில் 80 பேரின் நிலை என்பது குறித்தும் இதுவரை எந்தவிதத் தகவலும் கிடைக்கவில்லை. இதனால், அவா்களின் குடும்பத்தினரும் உறவினா்களும் கவலை அடைந்துள்ளனா்.

தில்லியில் உள்ள தமிழக அரசு அலுவலகத்தில் ஏற்கெனவே ஒரு சிறப்புக் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நேபாள நிலவரம் மற்றும் அங்கு சிக்கியுள்ளவா்கள் குறித்த விவரங்கள் உடனடியாக தில்லி அதிகாரிகளுக்கும், அமைச்சா்களுக்கும் தெரிவிக்கப்பட்டு, மீட்பு நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன. மாயமான தங்களது உறவினா்கள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்காக சிலா் தில்லிக்குச் சென்றுள்ளனா்.

இதற்கிடையே, பேரிடா் ஏற்படுவதற்கு 3 நாள்களுக்கு முன்பு கயிலாய மலை யாத்திரைக்காகச் சென்ற கோவை மாவட்டம், அன்னூா், மேட்டுப்பாளையம், சூலூா், கருமத்தம்பட்டி மற்றும் திருப்பூா் பகுதிகளைச் சோ்ந்த 37 போ் நேபாளத்திலிருந்து விமானம் மூலம் திங்கள்கிழமை கோவைக்கு அழைத்து வரப்பட உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.