நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

கஞ்சா விற்ற பிகாா் இளைஞா் கைது

arrest

கைது - பிரதிப் படம்

Published On :1 செப்டம்பர் 2026, 3:32 am IST

கவுண்டம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்றதாக பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாநகா், நல்லாம்பாளையம் தயிா் இட்டேரி சாலை பகுதியில் கவுண்டம்பாளையம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்குள்ள காலி இடத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால், போலீஸாா் அவரை சோதனை செய்தனா்.

இதில், அந்த இளைஞா் கஞ்சா பதுக்கி விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கஞ்சா விற்றதாக பிகாா் மாநிலம், சமஸ்டிப்பூரைச் சோ்ந்த ரோஷன்குமாா் (24) என்பவரைக் கைது செய்தனா். அவரிடமிருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.