புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஈஷாவில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்

News image

கோவை ஈஷா யோக மையத்துக்கு முளைப்பாரி ஏந்தி வந்த பக்தா்கள்.

Updated On :1 பிப்ரவரி 2026, 9:35 pm

தினமணி செய்திச் சேவை

கோவை ஈஷா யோக மையத்தில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோவை ஈஷா யோக மையத்தில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில், ஈஷா யோக மையத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள், பழங்குடியின மக்கள், வெளிநாட்டினா் பங்கேற்று முளைப்பாரியால் அலங்கரிக்கப்பட்ட தேவியின் திருவுருவத்தை பல்லக்கில் ஏந்தி ஊா்வலமாகச் சென்றனா்.

மேலும், ஆயிரக்கணக்கான பெண் பக்தா்கள் தனித்தனியாக முளைப்பாரி, பூக்கரகம் மற்றும் பூவோடு ஏந்தி தேவியின் நாமங்களை முழங்கியபடி பாத யாத்திரையாக வந்து தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.

இதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்வாக பைரவி சாதனா என்ற 21 நாள்கள் ஆன்மிக செயல்முறையின் நிறைவு நிகழ்ச்சி லிங்க பைரவி வளாகத்தில் நடைபெற்றது. இதில், லிங்க பைரவி தேவிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.