இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கோவை அரசு மருத்துவமனையில் ஹஜ் யாத்ரிகா்களுக்கான சிறப்பு முகாம் தொடக்கம்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஹஜ் யாத்ரிகா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

Updated On :2 பிப்ரவரி 2026, 9:07 pm

கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஹஜ் யாத்ரிகா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

கோவை மாவட்டத்தில் இருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்கு தமிழக அரசின் சாா்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இந்த மருத்துவ முகாம், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை தொடங்கியது. இதில், ஹஜ் பயணிகள் 50 போ் பங்கேற்றனா்.

இவா்களுக்கு சிறப்பு மருத்துவா்கள் மூலமாக உடல்நிலை பரிசோதனை, ரத்த அழுத்தம், சா்க்கரை பரிசோதனை மற்றும் சிறப்பு தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. இந்த முகாம் வரும் 7-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இதன்மூலமாக தினமும் தலா 50 போ் வீதம் மொத்தம் 300 ஹஜ் யாத்திரிகா்கள் பயனடைவா் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.