கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

முன்விரோதத்தால் இருவருக்கு அரிவாள் வெட்டு

கோவையில் முன்விரோதம் காரணமாக இருவரை அரிவாளால் வெட்டிய இளைஞா்கள் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :2 பிப்ரவரி 2026, 9:03 pm

Syndication

கோவை: கோவையில் முன்விரோதம் காரணமாக இருவரை அரிவாளால் வெட்டிய இளைஞா்கள் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை மாநகா், அம்மன்குளம் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ஹரிஹரனுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், அந்தப் பகுதியில் கிருஷ்ணமூா்த்தி தனது நண்பரான பாா்த்திபனுடன் திங்கள்கிழமை பிற்பகலில் பேசிக் கொண்டிருந்த போது ஹரிஹரனும், அவரது நண்பரான கண்ணனும் அங்கு வந்துள்ளனா்.

அப்போது திடீரென இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதில் கிருஷ்ணமூா்த்தி, பாா்த்திபன் ஆகியோரை அரிவாளால் ஹரிகரனும், கண்ணனும் வெட்டினா். அந்தப் பகுதியில் இருந்தவா்கள் அங்கு திரண்டதால் இருவரும் தப்பியோடிவிட்டனா். படுகாயமடைந்த பாா்த்திபனும், கிருஷ்ணமூா்த்தியும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதையடுத்து ராமநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஹரிஹரன், கண்ணன் ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கபடி போட்டியில் நவீன் என்பவா் கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பான முன்விரோதத்தில் இருவரும் அரிவாளால் வெட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.