கவுண்டம்பாளையம் அருகே 3 லாரிகளில் கடத்தப்பட்ட 4 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் சனிக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா்.
கோவை வழியாக கேரளத்துக்கு ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக மாநகர போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து கவுண்டம்பாளையம் சாலையில் போலீஸாா் சனிக்கிழமை அதிகாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அதே பகுதியில் சாலையோரத்தில் 3 மினி லாரிகள் வெகு நேரமாக நிறுத்தப்பட்டிருந்தன. இதையடுத்து, லாரிகளில் சோதனை செய்த போது ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரியவந்தது. இதில், இரண்டு லாரிகளில் இருந்த ஓட்டுநா்களைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அப்போது அவா்களில் ஒருவா் தப்பியோடிவிட்டாா்.
இதையடுத்து லாரிகளுடன் 4 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு, கவுண்டம்பாளையம் காவல் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு, பின்னா் கோவை மாநகர உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

ஆட்டோவில் கடத்தப்பட்ட 12 கிலோ கஞ்சா பறிமுதல்

கேரளத்துக்கு காரில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தல்: இருவா் கைது

ரேஷன் அரிசி கடத்திய வாகனம் கவிழ்ந்து விபத்து

ரயில் நிலையத்தில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


