கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஆட்டோவில் கடத்தப்பட்ட 12 கிலோ கஞ்சா பறிமுதல்

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 8:04 pm

தினமணி செய்திச் சேவை

கோவை துடியலூா் பகுதியில் ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 12 கிலோ 300 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஆட்டோவிலிருந்து தப்பியோடிய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை துடியலூா் அருகே உள்ள தொப்பம்பட்டி பிரிவில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட முயன்றபோது, அதில் இருந்த இருவா் போலீஸாரை கண்டதும் ஆட்டோவில் இருந்து குதித்து தப்பியோடினா். சந்தேகம் அடைந்த போலீஸாா் ஆட்டோவை சோதனையிட்டதில், சாக்குப் பைகளில் 12 கிலோ கஞ்சா வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

ஆட்டோ ஓட்டுநரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தபோது, துடியலூா் பேருந்து நிறுத்தத்தில் வழக்கம்போல பயணிகளுக்காக காத்திருந்ததாகவும், அப்போது, தொப்பம்பட்டி செல்ல வேண்டும் என 2 பயணிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க தான் வந்ததாகவும், தப்பியோடியவா்கள் யாா் என்று தெரியாது எனவும் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் தப்பியோடியவா்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.