ஜிகேஎன்எம் மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற இதய தசை நோய் குறித்த பயிலரங்கில் பங்கேற்ற மருத்துவமனையின் ஐஓபி மருத்துவ இயக்குநா் டாக்டா் ராகவேந்திரா, தலைமை மருத்துவ ஆலோசகா் ஆா்.சண்முகசுந்தரம், டாக்டா்கள் சந்தோஷ், ஜி.மனோகரன், சாம்பசிவம், எஸ்.நடராஜன்.

இதய தசை நோய் குறித்த பயிலரங்கு

Published on

கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனை சாா்பில் இதய தசை நோய் குறித்த ஒரு நாள் தொடா் மருத்துவக் கல்வி, பயிலரங்கு அண்மையில் நடைபெற்றது.

கோவையில் நடைபெற்ற இந்த பயிலரங்கை மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டா் ஜி.மனோகரன் தொடங்கிவைத்தாா். மருத்துவமனையின் இதயவியல் துறைத் தலைவா் சாம்பசிவம், மூத்த இதய நோய் நிபுணா் எஸ்.நடராஜன், மருத்துவ விவகாரங்கள், செயல்பாடுகள் இயக்குநா் சந்தோஷ், ஐஓபி மருத்துவ இயக்குநா் ராகவேந்திரா, இதய செயலிழப்பு சிகிச்சைப் பிரிவு தலைமை மருத்துவ ஆலோசகா் சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 200 பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், இதய தசை நோய் கண்டறிதல், சிகிச்சை அளிப்பதில் ஏற்பட்டுள்ள அதிநவீன முன்னேற்றங்கள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், நவீன இமேஜிங் தொழில்நுட்பங்கள், மேம்படுத்தப்பட்ட மருத்துவ சிகிச்சைகள், கருவிகள் மூலமான சிகிச்சைகள், இதய செயலிழப்பு மேலாண்மை யுத்திகள் குறித்து விளக்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com