தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

ஆன்லைன் லாட்டரி விற்பனை: இருவா் கைது

கோவையில் சட்டவிரோதமாக இணைதள (ஆன்லைன்) லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து ரூ.2.46 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

News image

கைது

Updated On :25 பிப்ரவரி 2026, 10:13 pm

கோவையில் சட்டவிரோதமாக இணைதள (ஆன்லைன்) லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து ரூ.2.46 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

கோவை, போத்தனூா் கருப்பராயன் கோயில் பகுதியில் இணைதள லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போத்தனூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் ஆய்வாளா் அசோக்குமாா் மற்றும் உதவி ஆய்வாளா் மாடசாமி ஆகியோா் சலாபி நகா் பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அந்தப் பகுதியைச் சோ்ந்த சகுபா் சாதிக் (44), கரும்புக்கடை பகுதியைச் சோ்ந்த லத்தீப் (46) ஆகியோரிடம் விசாரணை நடத்தினா். அவா்கள் இருவரும் இணையதள லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, சகுபா் சாதிக், லத்தீப் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 4 கைப்பேசிகள், ரூ. 2,46,700 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.