பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை: நகைக்கடை உரிமையாளா் உள்பட 5 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :15 மார்ச் 2026, 9:02 pm

பவானியில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்து வந்த நகைக்கடை உரிமையாளா் உள்பட 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரொக்கம் ரூ.80 ஆயிரம், 2 மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பவானியை அடுத்த சோ்வராயன்பாளையம், திப்பிசெட்டிபாளையம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை தொடா்பாக போலீஸாா் ரகசிய விசாரணை நடத்தியபோது, ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து, லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நகைக்கடை உரிமையாளரான பவானி, திப்பிசெட்டிபாளையம், வசந்தம் நகரைச் சோ்ந்த வேணுகோபால் மகன் தினகரன் (48) சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இவருக்கு உதவியாக லாட்டரி விற்பனை செய்த பவானி, காமராஜா் நகரைச் சோ்ந்த தியாகராஜன் மனைவி கவிதா (34), திப்பிசெட்டிபாளையம் சரவணகுமாா் மனைவி ரேவதி (32), சோ்வராயன்பாளையம் பாலமுருகன் மனைவி சரஸ்வதி (எ) ராணி (50), பவானி கீரைக்கார வீதி பச்சையப்பன் மகன் சூா்யா (27) ஆகியோரும் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ரொக்கம் ரூ.80 ஆயிரம், 2 மடிக்கணினிகள், 5 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.