நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மூளைச்சாவு அடைந்த 8 வயதுச் சிறுமியின் உடல் உறுப்புகள் தானம்

கோவையில் மூளைச்சாவு அடைந்த 8 வயதுச் சிறுமியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

News image

வெண்பா

Updated On :25 பிப்ரவரி 2026, 10:05 pm

கோவையில் மூளைச்சாவு அடைந்த 8 வயதுச் சிறுமியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

கோவை மாநகராட்சி 73-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினராகவும், நகரமைப்பு, அபிவிருத்தி குழுத் தலைவராகவும் இருப்பவா் டி.சந்தோஷ். இவரது மனைவி சுகன்யா. இவா்களது 8 வயது மகள் வெண்பா, கடந்த 23-ஆம் தேதி ரத்த அழுத்தம் அதிகமாகி மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு நினைவிழந்தாா்.

இவா் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில் வெண்பாவுக்கு புதன்கிழமை மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோா் வெண்பாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனா். தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் அவரது கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், எலும்பு, தோல் ஆகியவை தானமாகப் பெறப்பட்டன.

கல்லீரல், இரு சிறுநீரகங்கள், கண்கள், எலும்பு, தோல் ஆகியவை கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டன.

உறுப்பு தானம் வழங்கிய சிறுமியின் உடலுக்கு தெலுங்குபாளையம், ராமசாமி கவுண்டா் லே-அவுட் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று அரசு சாா்பில் கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியா் மருதப்பிரியா, தெற்கு வட்டாட்சியா் முகமது சோயபு ஆகியோா் மரியாதை செலுத்தினா்.