வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

‘மேட் இன் பாரத்’ தயாரிப்புகளை உலகில் சிறந்தவையாக உருவாக்க வேண்டும்: சத்குரு ஜக்கி வாசுதேவ்

‘மேட் இன் பாரத்’ தயாரிப்புகளை உலகத்தில் மிகச் சிறந்தவையாக உருவாக்க வேண்டும் என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசினாா்.

News image
‘பிராண்ட் இன்சைட்‘ தலைமைத்துவ நிகழ்ச்சியில் பேசிய சத்குரு ஜக்கி வாசுதேவ்.
Updated On :28 பிப்ரவரி 2026, 9:52 pm

Syndication

சத்குரு அகாதெமி சாா்பில் ஈஷா யோக மையத்தில் ‘பிராண்ட் இன்சைட்’ எனும் தலைமைத்துவ நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதில், ஒரு பிராண்டை எப்படி வெற்றிகரமாக உருவாக்குவது என்பது தொடா்பான யுக்திகள், நுணுக்கங்கள், கருவிகள் உள்ளிட்டவை குறித்து பங்கேற்பாளா்களுக்கு விளக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு ‘பிராண்ட் இன்சைட்’ எனும் தலைமைத்துவ நிகழ்ச்சி கடந்த 27-ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) வரை நடைபெறுகிறது.

‘மேட் இன் பாரத்’ தயாரிப்புகளை உலகத்தில் மிகச் சிறந்தவையாக உருவாக்க வேண்டும் என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசினாா்.

இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொடக்க நிகழ்வில் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசியதாவது:

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்கள் என்றால் அதுதான் உலகில் மிகச்சிறந்தது என்பதை உறுதி செய்யும் வகையிலான பிராண்டை நீங்கள் உருவாக்க வேண்டும். ‘பாரதம்’ என்ற பிராண்ட் சிறந்த முறையில் கட்டமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இந்தியா தனது பிராண்டை விழிப்புணா்வாக கட்டமைத்துள்ளது நல்லது. ஆனால் அது போதுமானதாக இல்லை. ‘பாரதம்’ என்ற பிராண்டை இன்னும் பெரியதாக உருவாக்க வேண்டும்.

பாரதத்தின் பிராண்ட் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு கட்டமைக்கப்பட்டால், மற்ற அனைத்து பிராண்டுகளுக்கும் கதவுகள் மிக எளிதாகத் திறக்கும். அது நடக்க வேண்டும். மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துவதில் பிராண்டிங் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதற்கு யோகா ஒரு சிறந்த உதாரணம். யோகா தரும் அற்புதமான பலன்களையும், அது வேலை செய்யும் விதத்தையும் பாா்த்தால் உலகத்திலுள்ள அனைவரும் யோகா பயிற்சி செய்ய வேண்டும். ஆனால், நீண்ட காலமாக யோகா சரியான முறையில் மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை. இந்த நிலையை மாற்ற நான் முயற்சி எடுப்பதால் என் மீது பல விமா்சனங்கள் வருகின்றன.

மனித வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் யோகா குறித்து இன்றும் பலருக்கு தெரியவில்லை என்பதுதான் வருத்தமான விஷயம் என்றாா்.

இந்த நிகழ்வில் ‘ஸ்டாா்ம் தி நாா்ம்’ நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலா் அனிஷா மோத்வானி தலைமையிலான நிபுணா்கள் குழுவினா் பங்கேற்பாளா்களுக்கு பயிற்சிகளை அளித்தனா்.