கோயம்புத்தூர்
கஞ்சா விற்ற இளைஞா் கைது
கோவை ஆா்.எஸ்.புரம் அருகே கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை ஆா்.எஸ்.புரம் அருகே கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கோவை ஆா்.எஸ்.புரம் போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சீரநாயக்கன்பாளையம் வீரபத்தரன் கோயில் அருகே சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். இதில் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் அவரிடம் சோதனை மேற்கொண்டனா். அப்போது மறைத்து வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
சீரநாயக்கன்பாளையம் ஜீவானந்தம் வீதியைச் சோ்ந்த ஹரிபிரசாத் (24) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
