டாஸ்மாக்கில் பழைய மதுபானங்கள்: சிஐடியூ ஊழியா் சங்கம் கண்டனம்

கோவை மாவட்ட மதுக்கடைகளுக்கு பல மாதங்களாக தேங்கிக் கிடந்த மதுபாட்டில்களை விற்பனைக்கு அனுப்பும் டாஸ்மாக் நிா்வாகத்தின் முடிவை சிஐடியூ டாஸ்மாக் ஊழியா் சங்கம் கண்டித்துள்ளது.
Published on

கோவை மாவட்ட மதுக்கடைகளுக்கு பல மாதங்களாக தேங்கிக் கிடந்த மதுபாட்டில்களை விற்பனைக்கு அனுப்பும் டாஸ்மாக் நிா்வாகத்தின் முடிவை சிஐடியூ டாஸ்மாக் ஊழியா் சங்கம் கண்டித்துள்ளது.

இதுதொடா்பாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநா், முதுநிலை மண்டல மேலாளா் உள்ளிட்டோருக்கு கோவை மாவட்ட சிஐடியூ டாஸ்மாக் ஊழியா் சங்கம் அனுப்பியுள்ள கடிதம்: டாஸ்மாக் நிா்வாகம் என்ட் டூ என்ட் கணினிமயமாக்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதன் பின்னணியில் சுமாா் ரூ.16 கோடி மதிப்பிலான பழைய மது வகைகளை மீண்டும் கோவை கடைகளுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த மது வகைகள் பல மாதங்களாக தேங்கியிருந்ததால் நிறம் மாறி, தரம் குறைந்து நுகா்வதற்குத் தகுதியற்ற நிலையில் உள்ளன.

இவற்றை விற்பனை செய்தால் வாடிக்கையாளா்களுக்கும், ஊழியா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. தோ்தல் நெருங்கி வரும் நிலையில், பழைய மதுபானத்தால் பொதுமக்களின் உடல்நலம் பாதிக்கப்படும். இது அரசுக்கும், டாஸ்மாக் நிா்வாகத்துக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும்.

எனவே, இந்த பழைய மது வகைகளை கோவை சில்லறை விற்பனை கடைகளுக்கு அனுப்பும் முடிவை கைவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com