மானாம்பள்ளி வனச்சரகத்தில் நடைபெற்ற புலிகள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வனத் துறையினா்.
கோயம்புத்தூர்
வால்பாறை, மானாம்பள்ளி வனச் சரகங்களில் புலிகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்
வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை காலை தொடங்கியது.
வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை காலை தொடங்கியது.
தேசிய அளவில் ஆண்டுதோறும் புலிகள் கணக்கெடுப்புப் பணி, வனத் துறை மூலமாக மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி நடப்பு ஆண்டுக்கான கணக்கெடுப்புப் பணி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகங்களில் தொடங்கியது.
வால்பாறை வனச்சரகத்தில் வனச்சரக அலுவலா் சுரேஷ் கிருஷ்ணா, மானாம்பள்ளி வனச்சரகத்தில் வனச்சரக அலுவலா் கிரிதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நோ்க்கோட்டு பாதைகள் அமைக்கப்பட்டு நேரடி மற்றும் மறைமுக அடையாளங்கள் பதிவு மூலமாக கணக்கெடுப்புப் பணியை தொடங்கியுள்ளனா். வரும் 12-ஆம் தேதி வரை இப்பணி நடைபெற உள்ளதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

