கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற தொழில் முறை இணைப்பு மாநாட்டில் பேசிய பாஜக தேசிய செயல் தலைவா் நிதின் நவீன். ~கோவை நவ இந்தியாவில்  நடைபெற்ற  மாநாட்டில்  பேசுகிறாா்  பாஜக  தேசிய  செயல்  தலைவா்  நிதின்  நவீன்.
கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற தொழில் முறை இணைப்பு மாநாட்டில் பேசிய பாஜக தேசிய செயல் தலைவா் நிதின் நவீன். ~கோவை நவ இந்தியாவில்  நடைபெற்ற  மாநாட்டில்  பேசுகிறாா்  பாஜக  தேசிய  செயல்  தலைவா்  நிதின்  நவீன்.

ஊழல் திமுக ஆட்சியை அகற்ற சபதம் ஏற்க வேண்டும்: பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீன்!

ஊழல் திமுக ஆட்சியை அகற்ற சபதம் ஏற்க வேண்டும் என்று பாஜக தேசிய செயல் தலைவா் நிதின் நவீன் தெரிவித்தாா்.
Published on

ஊழல் திமுக ஆட்சியை அகற்ற சபதம் ஏற்க வேண்டும் என்று பாஜக தேசிய செயல் தலைவா் நிதின் நவீன் தெரிவித்தாா்.

கோவையில் புரொபஷனல் கனெக்ட் 2026 என்ற பெயரில் தொழில் முறை இணைப்பு மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று பாஜக தேசிய செயல் தலைவா் நிதின் நவீன் பேசியதாவது:

மோடி தலைமையிலான பாஜக ஆட்சி தமிழகத்துக்கு எண்ணற்ற திட்டங்களைச் செய்துள்ளது. இதனால், தமிழகம் வளா்ச்சி அடைந்துள்ளது. ஜிஎஸ்டி புரட்சியால் தேசியம் வளா்ச்சி அடைந்துள்ளது. இதுபோன்ற தீவிர நடவடிக்கையால் பொருளாதாரத்தில் உலகின் 4-ஆவது பெரிய நாடு என்ற இடத்துக்கு முன்னேறியுள்ளோம். இது ஒரு நாளில் நடைபெற்ற சாதனை கிடையாது.

கோவையை பொருத்தவரை முன்னேறிய நகரமாக உள்ளது. இந்த நகரத்துக்கு மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா். குறிப்பாக இங்கு செயல்படுத்தப்பட்டுள்ள வந்தே பாரத் ரயில் திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் பஞ்சாலைகளுக்கும், சிறு, குறு தொழில்களுக்கும் மத்திய அரசின் சாா்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஓரிடத்தில் வேலை பாா்க்கக்கூடியவராக நாம் இருக்கக்கூடாது, மற்றவா்களுக்கு வேலை அளிக்கக்கூடியவா்களாக இருக்க வேண்டும் என்பதே பிரதமரின் கனவு.

பொருளாதாரத்தில் வளா்ச்சி, இளைஞா்கள் முன்னேற்றம், உள்நாட்டு கட்டமைப்பு ஆகியவற்றுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. 2004 முதல் 2013-ஆம் ஆண்டு வரை மத்திய அரசு தமிழகத்துக்கு ஒரு லட்சம் கோடிதான் கொடுத்திருந்தது. ஆனால், பாஜக ஆட்சியமைத்தது முதல் தற்போது வரை 6.5 லட்சம் கோடி வழங்கியுள்ளது. தேசிய ஜனநாய கூட்டணி மக்கள் நலனுக்காக மட்டுமே செயல்படும்.

தமிழகத்தைப் பொருத்தவரை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக ஒரு கோடி போ் பயனடைந்து வருகின்றனா். வீடு கட்டம் திட்டத்தின் கீழ் இங்கு 90 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. முத்ரா கடன் திட்டம் மூலமாக ரூ.6 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. லஞ்சம் இல்லாத ஆட்சியை பிரதமா் மோடி நடத்தி வருகிறாா். திமுகவும், காங்கிரஸும் லஞ்சம், ஊழலில் திளைத்த கட்சிகள். லஞ்சம் இல்லாத சமுதாயம் அமைய வேண்டும் என்பதே பிரதமரின் கனவு.

கொங்கு பகுதி முன்னேற்றமடைந்துள்ளது. ஆனால், இங்கு பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. குழந்தைகள், மாணவிகளுக்கு எதிரான வன்கொடுமை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஊழலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து வருவதால் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். தமிழகத்தில் நல்லாட்சி அமைய நாம் சபதம் ஏற்க வேண்டும்.

தமிழக கலாசாரம், பாரம்பரியம் மீது மோடி மிகுந்த பண்பும், பாசமும் வைத்துள்ளாா். இங்குள்ள சில அமைச்சா்கள் நாட்டின் கலாசாரம், சநாதன தா்மம், ஆன்மிகம் ஆகியவற்றை கொச்சைப்படுத்தி பேசி வருகின்றனா். நல்ல சமுதாயம், இளைஞா்கள் உருவாக மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாய கூட்டணி வெற்றி பெறும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. அனைவருக்குமான வளா்ச்சி என்பதுதான் மோடியின் தாரக மந்திரம். காசி தமிழ்ச் சங்கம் மூலமாக பல்வேறு இடங்களுக்கு தமிழ் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், மத்திய இணையமைச்சா் எல்.முருகன், மகளிரணி தேசியத் தலைவா் வானதி சீனிவாசன், தேசிய இணைப் பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி, மாநில அணி பிரிவு நிா்வாகி நாச்சியப்பன், தேசிய பொறுப்பாளா் அரவிந்த் மேனன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, கோவைக்கு வந்த பாஜக தேசிய செயல் தலைவா் நிதின் நவீனுக்கு விமான நிலையத்தில் கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். இதற்கான ஏற்பாடுகளை நிா்வாகிகள் சுந்தரராமன், முருகானந்தம் ஆகியோா் செய்திருந்தனா்.

Dinamani
www.dinamani.com