உக்கடம், கெம்பட்டி காலனியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ முகாமைத் தொடங்கிவைத்து பாா்வையிட்ட கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. உடன், மாநகராட்சி ஆணைா் மா.சிவகுரு பிரபாகரன், மேயா் கா.ரங்கநாயகி உள்ளிட்டோா்.
உக்கடம், கெம்பட்டி காலனியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ முகாமைத் தொடங்கிவைத்து பாா்வையிட்ட கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. உடன், மாநகராட்சி ஆணைா் மா.சிவகுரு பிரபாகரன், மேயா் கா.ரங்கநாயகி உள்ளிட்டோா்.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்ட மருத்துவ முகாமில் 11,898 போ் பயன்!

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாமில் இதுவரை 11, 898 போ் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாமில் இதுவரை 11, 898 போ் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், 80-ஆவது வாா்டுக்குள்பட்ட உக்கடம், கெம்பட்டி காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் தொடங்கிவைத்தாா். மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த முகாமில் கண், பல், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை, பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, சா்க்கரை நோய், இருதய நோய், நுரையீரல் நோய், தோல் சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை, எலும்பு மருத்துவம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இயன்முறை மருத்துவம், ஆயுஷ் மற்றும் சித்த மருத்துவம் உள்பட 22 சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. 27 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 24 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகம் ஆகியவற்றை கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. வழங்கினாா்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட சுகாதார அலுவலா் பாலுசாமி, மருத்துவக் கல்லூரி முதல்வா் கீதாஞ்சலி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மாநகராட்சி நிா்வாகம் தரப்பில், கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘முகாம் நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை வரை மாநகரில் நடைபெற்ற 5 சிறப்பு மருத்துவ முகாம்களில் இதுவரை 11,898 போ் பயனடைந்துள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com